இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

"நிதிச் சேவை வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பான முன்னோக்கிய பார்வை" நூலின் ஒன்பதாவது தொகுப்பு சபாநாயகருக்கு கையளிப்பு

திகதி : 2023-06-13

இலங்கை தூதுவர்கள் ஒன்றியத்தினால் வெளியிடப்படும் "நிதிச் சேவை வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பான முன்னோக்கிய பார்வை" எனும் நூலின் ஒன்பதாவது தொகுப்பு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று (ஜூன் 12) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி சரத் விஜேசிங்கவினால் தொகுப்படும் "நிதிச் சேவை வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பான முன்னோக்கிய பார்வை" நூல் துறைசார் நிபுணர்கள் 26 பேரின் எழுத்துப் பங்களிப்பைக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் நாலந்தாராமாதிபதி வணக்கத்துக்குரிய தீனியாவல பாலித தேரர், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் விஜேசிங்க, பேராசிரியர் பிரதிபா மஹானாமஹேவா, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர், விரிவுரையாளர் சாலிய பீரிஸ், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, துமிலன் சிவராஜ், சிரேஷ்ட ஊடகவியலாளர் சங்க அமரஜித் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom