கௌரவ சபாநாயகர் மற்றும் துருக்கி ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு |
திகதி : | 2023-06-05 |
துருக்கியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அதிமேதகு ரஜப் தையிப் அர்துகான் (Recep Tayyip Erdoğan) பதவியைப் பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ அரச வைபவத்தில் அந்நாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்புக்கமைய கௌரவ சபாநாயகர் நேற்று (ஜூன் 04) கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையில் பல வருடங்களாகக் காணப்படும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்ததுடன், அண்மையில் உலகையே உலுக்கிய துருக்கிய நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முன்வந்த இலங்கை அரசாங்கத்துக்கும், முப்படையினரைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கும், வைத்தியர்கள் மற்றும் தாதிகள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும் துருக்கி மக்கள் சார்பாக அந்நாட்டின் விசேட நன்றிகளை ஜனாதிபதி அர்துகான் சபாநாயகருக்குத் தெரிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







