முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் சேவைக்கு பாராளுமன்றப் பணியாளர்கள் பாராட்டு |
திகதி : | 2023-05-30 |
பாராளுமன்ற செயலாளர் நாயகமாகவும் 29 வருட தனது பாராளுமன்ற சேவைக்காலத்தை நிறைவு செய்து கடந்த மே 23 ஆம் திகதி ஓய்வுபெற்ற தம்மிக்க தசநாயக்கவின் பணிகளை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமயில் பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, குழுக்களில் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்றத்தின் தற்போதைய செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தற்போதைய பணியாட் தொகுதியின் தலைமை அதிகாரியும் பிரதி செயலாளர் நாயகமுமான டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற செயலகத்தின் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பணியாட்களும் பாராளுமன்ற இணைந்த சேவையின் பணியாளர்களும் செயலாளர் நாயகத்தின் பணிகளை பாராட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு அவரின் ஓய்வு வாழ்க்கைக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்
















