சபாநாயரின் அறிவித்தல்கள் |
திகதி : | 2023-05-23 |
பாராளுமன்றம் இன்று (மே 23) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியதுடன், இதன் போது சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சபாநாயரின் அறிவித்தல்களை மேற்கொண்டார்.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியசின் அரசியலமைப்பின் 65(5)(இ) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்றச் செயலாளர் நாயகமாக பதவி வகித்த திரு. தம்மிக தசநாயக்க அவர்கள் 2023 மே 23 ஆம் திகதி முதல் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பதை சபாநாயகர் [பாராளுமன்றத்துக்கு அறிவித்தார். திரு. தம்மிக தசநாயக்க அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 2023 மே 17 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தினை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
அதேபோன்று, இலங்கை சனநாயக சோசலிசக் குடியசின் அரசியலமைப்பின் 65(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கௌரவ சனாதிபதி அவர்களால் பாராளுமன்ற பணியாட்டொகுதிப் பிரதானியாகவும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமாக பதவி வகித்த திருமதி குஷானி அனூஷா ரோஹணதீர அவர்கள் 2023 மே 23 ஆம் திகதி முதல் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையம் சபாநாயகர் அறிவித்தார்.
அதற்கு மேலதிகமாக, “இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113(2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பின்வரும் உறுப்பினர்களை மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார். அதற்கமைய, கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ அசோக் அபேசிங்ஹ, கௌரவ பீ.வை.ஜி. ரத்னசேக்கர, கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, கௌரவ (திருமதி) ராஜிகாக விக்கிரமசிங்க மற்றும் கௌரவ சமன்பிரிய ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், “களனி பௌத்த மகளிர் தருமச் சங்கம் (கூட்டிணைத்தல்)’ எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பின்வரும் உறுப்பினர்களை மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார். அதற்கமைய, கௌரவ விதுர விக்ரமநாயக, கௌரவ பிரசன்ன ரணவீர, கௌரவ கயந்த கருணாதிலக்க, கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான மற்றும் கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2023 மே 23 ஆம் திகதி “ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தில் தன்னால் சான்றுரை எழுதப்பட்டதென்பதையும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
சபாநாயரின் அறிவித்தல்கள்
பாராளுமன்றம் இன்று (23) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியதுடன், இதன் போது சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சபாநாயரின் அறிவித்தல்களை மேற்கொண்டார்.

விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்