இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர், சபாநாயகரைச் சந்தித்தார்

திகதி : 2023-05-16

இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் போஜ் ஹார்ன்போல் (Poj Harnpol), சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (மே 09) சந்தித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை - தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை புதுப்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பௌத்த நாடுகளான தாய்லாந்து மற்றும் இலங்கை பௌத்த விவகாரங்கள் தொடர்பான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும், வணக்கத்துக்குரிய சோம்தேஜ் அரியவோசோகதாயன் தேரரின் 96வது பிறந்த தினக் கொண்டாட்டத்தை இந்நாட்டின் மஹாசங்கத்தினரின் பங்குபற்றலுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசயநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom