இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளுக்கான பரிச்சயப்படுத்தல் செயலமர்வு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் நாளை (13)

திகதி : 2023-05-12

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் இணைந்து செயற்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (மே 13) சனிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவியுடன் இலங்கை பாராளுமன்றத்தினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 17 விடயங்களுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான இளைஞர் பிரதிநிதிகள் பத்திரிகை விளம்பரங்கள் வெளியிடப்பட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு அமைய இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைய தெரிவுசெய்யப்பட்ட 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் பிரதிநிதிகள் 550 பேர் இந்த செயலமர்வுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவத்தில் இந்த துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் செயற்படுகின்றன. பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கு அமைய குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரினால் ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை அழைக்க முடியும். அந்த வகையில் ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழு தொடர்பிலும் இளைஞர் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

 

soc-youth-workshop

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom