இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புக்கள்

திகதி : 2023-04-26

2023 ஏப்ரல் 26 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு ஆரம்பத்தின்போது சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பின்வரும் அறிவித்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

2023 ஏப்ரல் 04 ஆம் திகதி சபாநாயகரினால் இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் பற்றி உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் அறிவித்தலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நிலையியற் கட்டளைகள் இல. 55(2) (ஆ) இன் ஏற்பாடுகளுக்கமைய, சட்டமூலம் ஒன்று தொடர்பில்  உயர்நீதிமன்றத்துக்கு மனுவொன்று சமர்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அந்த சட்டமூலம் தொடர்பான தீர்மானம் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டத்தை அடுத்து சபாநாயகர் அந்தத் தீர்மானத்தை  பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ உதய கம்மன்பில, கௌரவ கெவிந்து குமாரதுங்க மற்றும் கௌரவ அதுரலியே ரதன தேரர் ஆகியோரினால் அந்த அறிவித்தல் ஊடாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சரியாகத்  தெரிவிக்கப்படவில்லை என 2023.04.25 ஆம் திகதி இந்த சபையில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தெளிவின்மை உறுப்பினர்களுக்கு இருப்பின், உயர்நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைய இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரண்பாடானதாக இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், அதன்படி, குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைய சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பதையே சபாநாயகரின் அறிவித்தல் மூலம் தெரிவிக்கப்பட்டதாக சபாநாயகர் வலியுறுத்துகிறார்.

குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை சபையில் சமர்ப்பித்து அதனை ஹன்சாட் அறிகையில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தற்பொழுது அதனை பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என சபாநாயக்கர் மேலும் அறிவித்தார்.

அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர், கௌரவ அஜித் ராஜபக்ஷ  அவர்களால் 2023 ஜனவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை விடயம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணையொன்று கொண்டு வரப்படலாம் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom