சிங்கள – தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி |
திகதி : | 2023-04-14 |
இலங்கையின் சிங்கள – தமிழ் மக்களின் பாரம்பரியமான பிறக்கவிருக்கும் 2023ஆம் ஆண்டு புத்தாண்டு ஆசீர்வாதங்கள் நிறைந்த, நல்ல ஆசைகள் நிறைவேறும், ஆரோக்கியமான வளங்களை உருவாக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை முதற்கண் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடந்த சில வருடங்களாக நாடு மற்றும் உலகம் என்ற ரீதியில் நாம் பல சவால்களைச் சந்தித்திருந்தபோதிலும் புத்தாண்டின் மதிப்பை இழக்கவில்லை. உலகம் பயம் - சந்தேகம் ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தாலும் எமது மூத்த பரம்பரையினர் தம்மிடம் காணப்படும் பெரும் செல்வமாகக் கருதும் சிங்கள-தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களை தமது பிள்ளைகளுடன் கொண்டாடும் பாரம்பரியம் எனது நினைவுகளிலிருந்து அழியவில்லை. அன்று போல் இன்றும் நாளையும் இதற்கான கௌரவம் இலங்கைப் பெண்களையே சேரும். ஆண் பெண் இரு பாலாரும் குடும்பத்துக்காகக் கடுமையாக உழைத்துப் பெற்ற செல்வத்தை எவ்வாறான பொருளாதாரக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் வீட்டின் மீதுள்ள அன்பைப் பேணி, அத்தகைய கொண்டாட்டங்களைச் சிக்கனமாக முன்னெடுக்கும் இந்நாட்டின் உண்மையான நிதிப் பொறுப்பாளர்களாக அவர்கள் விளங்குகின்றனர். தாய்வீட்டில் குடும்பங்கள் ஒன்றிணையும் சந்தர்ப்பத்தில் தாயின், மனைவியின், மகளின் முகத்தில் ஏற்படும் புன்னகையைவிட எமக்குத் தெரியாமல் அவர்களின் கண்களில் சிந்துகின்ற ஆனந்தக் கண்ணீரிலேயே பௌத்த-இந்து புத்தாண்டின் உண்மையான அர்த்தத்தை உணர்கின்றேன்.
தாய்நாட்டுடன் இதயத்தாலும், ஆன்மாவாலும் பிணைக்கப்பட்ட மூத்தவர்களாகிய நாம் தற்பொழுது, ஏழு கடல் தாண்டி புதிய உலகத்தைக் காண விரும்பும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் நிறைந்த குழுவுடன் இருக்கின்றோம். புதிய உலகத்தைக் கற்பனை செய்யவில்லையென்றால் பழமை வாதத்தின் பிணைப்புக்களில் நாம் சிக்கிவிடுவோம். இருந்தபோதும், புத்தாண்டு என்பது வயது வித்தியாசம் இன்றி, புதிய தலைமுறைக்கு கிராமம்-நாட்டுக்குச் செல்ல, கோவில்களுக்குச் சென்று வழிபட, முந்திரிகை வாசனையை அனுபவித்திட, ஊஞ்சல் ஆடுவது போன்ற நாட்டுப் புறப் பாணியில் கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.
அது மாத்திரமன்றி, புத்தாண்டு எமது பழக்க வழக்கங்களை உலகத்துக்குப் பறைசாற்றும் கண்ணாடியாகவும் திகழ்கிறது. தற்போதுள்ள பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் நவீன ஊடகங்கள் இதற்கான சாளரத்தை உலகுக்குத் திறந்து விடுகின்றன. வணிகமயமாக்கலுக்குள் சிக்கவில்லையென்றால் பௌத்த மற்றும் இந்து மதங்களால் செழுமைப்படுத்தப்பட்ட ஆன்மீகக் கலாசாரத்தின் உண்மையான வாசனை அந்த சாளரங்களினூடாக வீசும். உண்மையான பௌத்தர்கள் அல்லது இந்துக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவராயின் புத்துணர்வு என்பது அவர்களுக்கு மற்றொரு தொடர்புடைய கருத்தாகும். புத்தாண்டில் எமது செலவை அதிகரிக்கும் பொருட்கள், கருவிகளைச் சேர்ப்பதைவிட எண்ணங்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது மதிப்பு மிக்கதாக அமையும். சிறு பிள்ளைகளுக்கு இந்த முன்மாதிரியை ஒரேநேரத்தில் கற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், மூத்தவர்களாகிய நாம் அனைவரும் ஒரு ரூபாயைக் கூட வீணாக்க முடியாதளவுக்கு கடினமான சூழ்நிலையில் இருக்கின்றோம்.
பிறக்கவிருக்கும் சிங்கள – தமிழ் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் வெற்றி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த புதியதொரு ஆண்டாக அமையட்டும்.
இங்ஙனம்,
மஹிந்த யாப்பா அபேவர்தன
சபாநாயகர்,
இலங்கைப் பாராளுமன்றம்
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






