பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு (03) நியமிக்க ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் |
திகதி : | 2023-04-04 |
பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிப்பதற்கு கௌரவ ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியது. இந்த நியமனம் 2023 மார்ச் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.
அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஏப்ரல் 01ஆம் திகதி கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சாகர காரியவசம் மற்றும் கௌரவ கபீர் ஹாசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத கலாநிதி பிரதாப் ராமானுஜம், வைத்தியகலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






