இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கைப் பாராளுமன்றம் ஆசிய பசுபிக் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு ஊழியர்களுக்கு மதிப்பாய்வின் மூலம் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்த முதலாவது சர்வதேச பயிற்சி நடைபெற்றது

திகதி : 2023-03-31

ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு ஊழியர்களின் பங்குபற்றலுடன் மதிப்பாய்வின் மூலம் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி அமர்வு மற்றும் கலந்துரையாடல் 30.03.2023 பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு ஊழியர்களின் பங்குபற்றலுடன் மதிப்பாய்வின் மூலம் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து 2023 மார்ச் 27ஆம் திகதி முதல் மார்ச் 30ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சித் தொடரின் இறுதி அமர்வாக இது அமைந்தது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேர்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, சபை முதல்வர் அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, உலகளாவிய பாராளுமன்ற மதிப்பாய்வுகளுக்கான மன்றத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கபீர் ஹாசிம் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசாநயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பலமான தேசிய மதிப்பாய்வு நடைமுறையை ஊக்குவிப்பது தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தின் நடவடிக்கை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கைப் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே.ஜயதிலக, களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா, ஜேர்மனி சார்லண்ட் பல்கலைக்கழக மதிப்பீட்டு மையத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான பேராசிரியர் ரெய்ன்ஹார்ட் ஸ்டாக்மேன் மற்றும் UNFPA மதிப்பீட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் மார்கோ செகோன் ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

இலங்கைப் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த இந்தக் குழுவினர் சபா மண்டபம் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் பிரதான இடங்களைப் பார்வையிட்டனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom