இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றம் அடுத்த வாரம் 4ஆம் திகதி மாத்திரம் கூடவுள்ளது

திகதி : 2023-03-27

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (24) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய, ஏப்ரல் 4ஆம் திகதி மு.ப 09.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை 1979 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2306/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும், 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2320/46 மற்றும் 2320/47 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.

பின்னர் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏப்ரல் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூடவிருந்த ஏப்ரல் மாதத்துக்கான இரண்டாவது வார பாராளுமன்ற அமர்வுகளுக்குப் பதிலாக ஏப்ரல் 25 செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

 

4 5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom