அரசிலமைப்புப் பேரவைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் அங்கம் வகிக்கும் அரசியற்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாத உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி - சபாநாயகர் அறிவிப்பு |
திகதி : | 2022-12-06 |
அரசியலமைப்பின் 41அ(1)(ஊ) யாப்பின் பிரகாரம் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கம் வகிக்கும் அரசியற்கட்சி அல்லது சுயேட்சைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கத்துக்கு அமைய நியமிப்பதற்கான விசேட கூட்டம் 2022 டிசம்பர் 08 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை 01 இல் இடம்பெறும் என சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (டிச. 06) மு.ப. அறிவித்தார்.
அங்கு கலந்துரையாடி அரசிலமைப்புப் பேரவையின் உறுப்பினராக உரிய உறுப்பினரொருவரை நியமிப்பதற்கு எதிர்க்கட்சித்தலைவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அனைத்து உறுப்பினர்களுக்கும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதேபோன்று, அந்தக் கூட்டத்திற்கு வருகைதராத உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் பெயர்கள் அல்லது கோரிக்கைகள் தொடர்பில் எந்தவகையிலும் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






