இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

திகதி : 2022-11-30

பாராளுமன்றத்தில் இன்றையதினம் (நவ. 30) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தில் தனது கையொப்பத்தையிட்டு சபாநாயர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப் படுத்தினார்.

2021ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக இந்தச் சட்டமூலம் பிரதமரும்,  பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தனவினால் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தி திருத்தப்படுவதுடன், இதன்மூலம் கடன்பெறுவதற்கான எல்லை 3,844 பில்லியன் ரூபாவிலிருந்து 4,507 பில்லியன் ரூபாவாகத் திருத்தப்படுகிறது.

இதற்கமைய, இந்தச் சட்டமூலம் 2022ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமாக இன்று முதல் (30) நடைமுறைக்கு வருகிறது.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom