இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

திகதி : 2022-11-29

இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர் ஜோ பஸ்வா நேற்று (நவ. 28) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். இதன்போது வரவுசெலவுத்திட்டக் காலம் மற்றும் பாராளுமன்றப் பணிகள் போன்று இரு நாடுகளிலும் காணப்படும் பாராளுமன்ற முறைமை மற்றும் அரசியல் கட்டமைப்பு என்பன தொடர்பில் இரு தரப்பினரும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

2023 இல் பிரான்ஸ் - இலங்கை இராஜதந்திர உறவுகளுக்கு 75 வருடங்கள் பூர்த்தியடைவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அந்த உறவுகளை வலுப்படுத்துவதற்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக புதிய பிரான்ஸ் தூதுவர் ஜோ பஸ்வா சபாநாயகரிடம் குறிப்பிட்டார்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom