புதிய மூன்று நிலையியற் குழுக்கள் தொடர்பான பிரேரணையை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் |
திகதி : | 2022-11-22 |
பாராளுமன்றத்தில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று நிலையியற் குழுக்கள் தொடர்பில் நிலையியற் கட்டளையில் திருத்தம் செய்வது குறித்த பிரேரணையை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதற்கு இன்று (நவ. 22) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய நாளை (23) இதற்கான அனுமதி பெறப்பட உள்ளது.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (22) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு மற்றும் வழிவகைகள் பற்றிய குழு என்பன அமைக்கப்படவுள்ளன. இந்தக் குழுக்களை அமைப்பதற்காக நிலையியற் கட்டளைகளை திருத்துவது தொடர்பில் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு அண்மையில் கூடிய போது தயாரிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய இந்தப் பிரேரணை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கக்கப்படவுள்ளது. நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்தப் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சபாநாயகர் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதேபோன்று, அரச சேவையிலுள்ள ஊழியர்களின் கட்டாய ஓய்வூதிய வயதை 60 வயது வரை குறைப்பதற்கான 22/1480/601/012 ஆம் இலக்க அமைச்சரவைக் கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட சேவைகள்/பதவிகள் தொடர்பில் கட்டாய ஓய்வூதிய வயதெல்லையை கருத்திற்கொள்ளும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சர் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான தீர்மானத்தை எதிர்வரும் 26 ஆம் திகதி ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









