இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு பாராளுமன்றத்தில் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

திகதி : 2022-11-22

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு பாராளுமன்றத்தில் 37 மேலதிக வாக்குகளால் இன்று (நவ. 22) நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் நடுநிலை வகித்திருந்தார்.

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஆரம்ப உரையை (வரவுசெலவுத்திட்ட உரை) ஜனாதிபதியும், நிதி பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க கடந்த 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுவரை ஞாயிற்றுக்கிழமை தவிர 07 நாட்கள் இடம்பெற்றது. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான குழு நிலை விவாதம் நாளை (23) ஆரம்பமாகி எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும். குழு நிலை விவாதம் தினமும் மு.ப 9.30 முதல் பி.ப 7.00 வரை நடைபெறவிருப்பதுடன், மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 08ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom