சட்டமூலங்கள் சிலவற்றை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் |
திகதி : | 2022-11-18 |
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 8 சட்டமூலங்களை நேற்று (நவ. 17) சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறை, நீதித்துறை (திருத்தம்), மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்), குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்), கண்டிய திருமண, மணநீக்கம் (திருத்தம்), குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்), சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தம்) மற்றும் அபாயகரமான விலங்குகள் (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய, இந்த சட்டமூலங்கள் 2022 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறை சட்டம், 2022 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தம்) சட்டம், 2022 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம், 2022 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்ககுடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டம், 2022 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க கண்டிய திருமண, மணநீக்கம் (திருத்தம்) சட்டம், 2022 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டம், 2022 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தம்) சட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க அபாயகரமான விலங்குகள் (திருத்தம்) சட்டம் என்ற பெயரில் 2022 நவம்பர் 17 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






