இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

திகதி : 2022-11-16

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றுவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (நவ. 16) சபையில் அறிவித்தார்.

இந்த பாராளுமன்ற விசேட குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே பணியாற்றவுள்ளார். அத்துடன் இக்குழுவின் உறுப்பினர்களாக கௌரவ நஸீர் அஹமட், கௌரவ அ. அரவிந்த் குமார், கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, கௌரவ தருமலிங்கம் சித்தார்தன், கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ சமிந்த விஜேசிறி, கௌரவ வருண லியனகே, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட, கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, கௌரவ லலித் வர்ண குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom