இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ அலி சப்ரி அவர்கள் பாராளுமன்ற டுவிட்டர் ஊடாக நேரலையில்

திகதி : 2022-11-09

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் முன்னோக்கிய வழி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் கலந்துகொள்ளும் நேரடி டுவிட்டர் கலந்துரையாடல் நாளை (நவ. 10) பி.ப. 12.30 மணி முதல் பி.ப. 01.30 மணி வரை பாராளுமன்ற உத்தியோகபூராவ டுவிட்டர் (@ParliamentLK) கணக்கினூடாக இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான பொதுமக்கள் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க முடியும் என்பதுடன், அன்றைய தினம் நேரடியாக இணைந்து கொண்டும் கேள்விகளை முன்வைக்க முடியும்.

பொதுமக்கள் மைய பாராளுமன்றத்திற்காக மக்கள் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த நேரடி டுவிட்டர் கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்துவருகின்றது.

 

twitter-spaces-nov-10

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom