இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

துறைசார் மேற்பார்வைக்குழுக்கள் மற்றும் மூன்று புதிய நிலையியற் குழுக்களை நியமிப்பது தொடர்பில் ஆதரவு வழங்குமாறு சபாநாயகர் கோரிக்கை

திகதி : 2022-11-08

பாராளுமன்றத்தில் நியமிக்கப்படவுள்ள 17 துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கான சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (நவ. 08) அறிவித்தார்.

அதேபோன்று, நியமிக்கப்படவுள்ள குழுக்கள் தொடர்பில் இன்றைய தினத்தில் இறுதித்தீர்மானத்துக்கு வந்து அனைத்துப் பணிகளையும் ஆரம்பிப்பதற்கு அவசியமான ஆதரவை வழங்குமாறு சபாநாயகர் அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய, இன்று (08) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக்குழுக் கூட்டங்களில் இந்தத் துறைசார் மேற்பார்வைக்குழுக்கள் தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பிலும் வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு (Committee on Banking and Financial Services), பொருளாதார உறுதிப்படுத்தல் குழு (Committee on Economic Stabilization) மற்றும் வழிவகைகள் பற்றிய குழு (Committee on Ways and Means) ஆகிய மூன்று குழுக்களை நியமிப்பது தொடர்பிலும் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom