இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தை நடத்திய மத்திய மகா வித்தியாலயம்

திகதி : 2022-11-03

கடவத்தை மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு அண்மையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் ஜனகாந்த சில்வா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

ஜனநாயகத்தின் பெறுமதியைப் பாடசாலை மாணவ மாணவியருக்கு நெருக்கமாகக் கொண்டுசென்று, எதிர்காலத் தலைமைத்துவத்திற்கான தூண்டுதலை உருவாக்குவது இதன் நோக்கமாகும். இதற்குத் தேவையான அடிப்படை வழிகாட்டல்களை இலங்கைப் பாராளுமன்றம் வழங்கியது.

இந்நிகழ்வில் பிரதம உரை நிகழ்த்திய இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் ஜனகாந்த சில்வா குறிப்பிடுகையில், எதிர்காலத் தலைமைத்துவத்துக்காகத் தற்போதைய மாணவர்கள் மத்தியில் காணப்படும் அர்ப்பணிப்பு மிகவும் சாதகமான சூழலாக அமைந்துள்ளது என்றும், அதற்காக மாணவர்களின் ஒன்றிணைந்த அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றல் என்பன பாராட்டப்பட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் களனி கல்வி வலயத்தின் முறைசாரா கல்வி மற்றும் ஆலோசனை தொடர்பான பிரதிப் பணிப்பாளர் சுதர்ஷனி பண்டார கலந்துகொண்டார். குறித்த பாடசாலையின் தகவல் மற்றும் தொடர்பாடல் பொறுப்பாசிரியர் நிலந்தி பெரேரா மற்றும் அப்பாடத்தைக் கற்கும் மாணவர்களின் தலைமையில் அப்பாடசாலையின் யூடியூப் அலைவரிசையில் இந்நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது.

 

1 3

4 5

8 13

15

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom