அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்துக்கு கௌரவ சரத் வீரசேகர எதிராக வாக்களித்ததாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பு |
திகதி : | 2022-10-22 |
பாராளுமன்றத்தில் நேற்று (ஒக். 21) விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர எதிராக வாக்களித்திருந்ததாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
இங்கு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு நிறைவடைந்ததை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக ஒரு வாக்கு அளிக்கப்பட்டது. அவ்வாறு சட்டமூலத்துக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர வாக்களித்திருந்தார்.
அதனையடுத்து, மூன்றாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன் சட்டமூலத்துக்கு ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், இதன் போதும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தார் என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






