அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது |
திகதி : | 2022-10-21 |
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் இன்று (ஒக். 21) நிறைவேற்றப்பட்டது.
இங்கு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு நிறைவடைந்ததை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக ஒரு வாக்கு அளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார்.
இதனை அடுத்து இடம்பெற்ற குழுநிலையின் போது சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய சட்டமூலத்துக்கு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது மூன்றாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன் சட்டமூலத்துக்கு ஆதரவாக 174 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. எதிராக ஒரு வாக்கு கிடைக்கப்பெற்றது.
இதற்கமைய அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் ஓகஸ்ட் 10ஆம் திகதி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் குறித்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கமைய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களுக்கு நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் (20) இரண்டாவது மதிப்பீடு ஆரம்பமானது. இதற்கான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் (21) தொடர்ந்தது. விவாதம் முடிவடைந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் பின்னர் முடிவுகளை அறிவிக்கும் போது வாக்களிப்பிலிருந்து விலகிக் கொண்டதாக குறிப்பிடப்பட்டது தவறுதலாக என்பதை சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய அறியத்தருகிறேன்.
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் இன்று (21) நிறைவேற்றப்பட்டது.
இங்கு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு நிறைவடைந்ததை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக ஒரு வாக்கு அளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார்.
இதனை அடுத்து இடம்பெற்ற குழுநிலையின் போது சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய சட்டமூலத்துக்கு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது மூன்றாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன் சட்டமூலத்துக்கு ஆதரவாக 174 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. எதிராக ஒரு வாக்கு கிடைக்கப்பெற்றது.
இதற்கமைய அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் ஓகஸ்ட் 10ஆம் திகதி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் குறித்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கமைய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களுக்கு நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் (20) இரண்டாவது மதிப்பீடு ஆரம்பமானது. இதற்கான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் (21) தொடர்ந்தது. விவாதம் முடிவடைந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் பின்னர் முடிவுகளை அறிவிக்கும் போது வாக்களிப்பிலிருந்து விலகிக் கொண்டதாக குறிப்பிடப்பட்டது தவறுதலாக என்பதை சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய அறியத்தருகிறேன்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்