பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் |
திகதி : | 2022-10-18 |
2002ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கான பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஒக். 18) பாராளுமன்றத்தில் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இன்றையதினம் நடைபெற்ற குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டின் மீதான விவாதம் முடிவடைந்ததும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்லவினால் வாக்கெடுப்புக் கோரப்பட்டது. இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்புக்கள் இன்றி சபையில் நிறைவேற்றப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






