பதில் பிரதம நீதியரசராக பணியாற்றுவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி பீ.பி. அலுவிஹாரேவை நியமிப்பதற்குப் பாராளுமன்றப் பேரவையில் இணக்கம் |
திகதி : | 2022-10-07 |
பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய வெளிநாடு செல்லும் 2022.10.08 அன்று முதல் 2022.10.13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதில் பிரதம நீதியரசராக பணியாற்றுவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி பீ.பி. அலுவிஹாரேவை நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்குப் பாராளுமன்றப் பேரவையில் நேற்று (ஒக். 06) இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் பதவியொன்றில் காணப்படும் வெற்றிடத்துக்கு ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.ஜே.கே.எஸ்.டபிள்யு. விக்ரமசிங்கவை நியமிப்பதற்குப் பாராளுமன்றப் பேரவையினால் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்றப் பேரவைக் கூட்டத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன, அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






