இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றமும், கொழும்பு பல்கலைக்கழகமும் இணைந்து ஆரம்பித்த குறுகிய கால பாடநெறியின் முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவு

திகதி : 2022-10-04

இலங்கை பாராளுமன்றம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன இணைந்து வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்பித்த பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால பாடநெறியின் முதலாவது கட்டம் அண்மையில் பூர்த்தியடைந்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைகள் திணைக்களத்தின் இறுதியாண்டு பட்டதாரி மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பாடநெறியின் வளவாளர்களாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இதற்கு அமைய கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் இப்பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றிருந்ததுடன், இதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக முதலாவது விரிவுரையை நடத்தியிருந்தார்.

இதன் பின்னர் கடந்த 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதில மற்றும் சட்டவாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா ஆகியோர் விரிவுரைகளை நடத்தியிருந்தனர்.

ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற முறைமை பற்றிய கோட்பாட்டு அறிவின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் குறுகிய பாடநெறியானது பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய அனுபவத்துடன் கூடிய பெறுமதியான குறுகிய பாடநெறியாக அமைந்தது என பாடநெறி முடிவின் போது கருத்துத் தெரிவித்த கொழும்புப் பலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகள் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி பிரதீப் பீரிஸ் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திசாநாயக ஆகியோர் சுட்டிக்காட்டினர்.

ஏனைய பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர்களுக்கு இந்த குறுகிய பாடநெறியை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை பாராளுமன்றம் பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்து இவ்வாறான கல்விப் பாடநெறியொன்றை ஆரம்பித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

 

12

34

5

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom