சிறுவர்களின் நலன்கருதி எதிர்வரும் காலங்களில் பாரிய திட்டங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம் - சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி கௌரவ ரோஹிணி கவிரத்ன |
திகதி : | 2022-10-01 |
இந்நாட்டின் பிள்ளைகளின் நலன் கருதி எதிர்வரும் காலங்களில் பாரிய செயல் திட்டங்களை மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக சிறுவர்களுக்கான பாராளுமன்ற குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.
விசேடமாக இந்த நாட்டின் சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் போசாக்கு, பாதுகாப்பு, கல்வி, உரிமைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விடயங்களை கையாளுகின்ற நிறுவனங்களின் தொழிற்திறன் தொடர்பில் உரிய அவதானத்தை செலுத்துவதற்கும் தமது ஒன்றியம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்கள் தொடர்பில் நேரடியாக தொடர்புபடும் அமைச்சுக்களான மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு போன்ற அமைச்சுகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் நிறுவனங்களுடன் எதிர்வருகின்ற காலங்களில் வினைத்திறனாக செயற்பட உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியிலேயே கவிரத்ன அவர் இது தொடர்பில் தெரிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







