இலங்கையில் பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்தல்

திகதி : 2022-09-20

Print
  • பொதுமக்கள் கேள்விகளுக்கு டுவிட்டர் ஸ்பேஸ் ஊடாக நேரடியாகப் பதில்

 

இலங்கையில் பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்வதன் தேவை தொடர்பில் சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹிணி கவிரத்ன ஆகியோர் கலந்துகொள்ளும் நேரடி டுவிட்டர் கலந்துரையாடல் நாளை (21) முற்பகல் 11.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை பாராளுமன்ற உத்தியோகபூராவ டுவிட்டர் (@ParliamentLK) கணக்கினூடாக இடம்பெறவுள்ளது.

இந்நாட்டில் பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பான பொதுமக்கள் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க முடியும் என்பதுடன், அன்றைய தினம் நேரடியாக இணைந்து கொண்டும் கேள்விகளை முன்வைக்க முடியும்.

பொதுமக்கள் மைய பாராளுமன்றத்திற்காக மக்கள் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த நேரடி டுவிட்டர் கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்துவருகின்றது.

 

twitter-spaces-20220921