பிரித்தானியாவின் எலிசபத் மகாராணியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து பாராளுமன்றத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி

திகதி : 2022-09-09

Print

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து இன்று (09) பாராளுமன்றத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்றம் இன்று மு.ப 9.30 மணிக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதுடன், பாராளுமன்ற அமர்வு ஆரம்பித்தின்போதே பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன முன்வைத்த பிரேரணைக்கு அமைய இவ்வாறு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்லவும் எலிசபத் மகாராணியின் மறைவு தொடர்பில் எதிர்க்கட்சியின் அனுதாபத்தைத் தெரிவித்தார்.

 

queen