இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

"இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி" எனும் தலைப்பில் மத்தியவங்கி ஆளுநர் நடாத்தும் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் பதில் செயலாளர் நாயகம் அறிவிப்பு

திகதி : 2022-08-25

"இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி" எனும் தலைப்பில் இலங்கை மத்தியவங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நடாத்தும் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார்.  

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கலந்துரையாடல் 2022 ஆகஸ்ட் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 1 இல் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி விடயங்கள் தொடர்பான எதிர்கால பாராளுமன்ற விவாதங்களில் வினைத்திறனாக பங்குபற்றுவதற்கு பயனுள்ள வகையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி பற்றிய உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom