இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற உறுப்பினர்களின் பணியாட்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் செயலமர்வு

திகதி : 2022-08-22

பாராளுமன்ற உறுப்பினர்களின் பணியாட்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில் (18) இடம்பெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் பொதுநிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக பணியாட்கள் குழுவில் இணைக்கப்பட்டுள்ள ஆய்வு அதிகாரிகளும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகளும் இந்தச் செயலமர்வில் கலந்துகொண்டனர். இலங்கை பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வா இதன்போது பிரதான விரிவுரையை வழங்கினார்.

ஒன்லைன் தொழிநுட்பத்தினூடாக இடம்பெற்ற இந்தச் செயலமர்வில் பாராளுமன்றத்தின் பணிகள், பாராளுமன்ற பாரம்பரியங்கள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயன்முறை, பாராளுமன்றக் குழுக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி பங்கேற்பாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன் பாராளுமன்றம் தொடர்பான காணொளிகளும் காண்பிக்கப்பட்டன.

பங்கேற்பாளர்களுக்கு பாராளுமன்ற சட்டவாக்கப் பணிகள் தொடர்பான சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்கு திறந்த கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பம் காணப்பட்டது.

இதுபோன்ற நிகழ்ச்சித்திட்டங்களை உங்களது நிறுவனம்/ அமைப்பு/ குழு ஆகியவற்றுக்கு மேற்கொள்ள ஆர்வமாக இருந்தால், https://www.parliament.lk/ta/get-involved/edu-centre எனும் இணைப்பின் மூலம் தகவல் படிவத்தை பூர்த்திசெய்து அல்லது 0112777100 எனும் தொலைபேசி ஊடாகதொடர்பாடல் திணைக்களத்தின் பொது சேவைகள் பிரிவை தொடர்புகொள்வதன் மூலமோ மேற்கொள்ள முடியும்.

 

3 2

6 8

9 10

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom