இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்

திகதி : 2022-08-10

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை  115 மற்றும் இன்றைய தினம் (10) பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கமைய கௌரவ நிமல் சிறிபால த சில்வா, கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி,  கௌரவ கஞ்சன விஜேசேகர, கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ  ஜோன்ஸ்டன் பர்னாந்து,  கௌரவ கயந்த கருணாதிலக்க, கௌரவ அநுர திசாநாயக்க, கௌரவ ரஊப் ஹகீம், கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ  காமினி லொக்குகே, கௌரவ  சீ.பீ. ரத்நாயக்க, கௌரவ றிஸாட் பதியுதீன், கௌரவ  விமல் வீரவங்ச, கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார , கௌரவ மனோ கணேசன், கௌரவ தயாசிறி ஜயசேக்கர, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம், கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ சாகர காரியவசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom