இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் பாராளுமன்றத்துக்கு வருகைதந்தார்

திகதி : 2022-07-27

இலங்கையின் 32வது பிரதமராக நியமிக்கப்பட்ட கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் முதல் தடைவையாக இன்று (27) பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

புதிய சபை முதல்வர் அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க, கௌரவ யாதானிமி குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் அநுர திசாநாயக, சபை முதல்வரின் செயலாளரும், பிரதமரின் மேலதிக செயலாளருமான ஹர்ஷ விஜேவர்தன, ஆளும் கட்சி முதற்கோலாசானின் செயலாளரும், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட பலரும் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் பிரதமரை வரவேற்றனர்.

இதன் பின்னர் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட நுழைவாயிலின் ஊடாக பாராளுமன்றத்தில் அமையப்பெற்றுள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு வருகை தந்தார். இங்கு  கௌரவ வாசுதேவ நாணயகார, கௌரவ பந்துல குணவர்தன, கௌரவ நிமல் லன்சா, கௌரவ சிசிர ஜயகொடி, கௌரவ (வைத்தியகலாநிதி) கயஷான் நவனந்த  உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வருகை தந்திருந்தனர்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதிலக மற்றும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

 

2 4

5 9

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom