பாராளுமன்றம் மூலமான சனாதிபதி தேர்வு |
திகதி : | 2022-07-11 |
அரசியலமைப்பின் 40 ஆம் உறுப்புரையில் பிரகாரம் சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையானது 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தில் குறித்துரைக்கிறது. அரசியலமைப்பின் 38 ஆம் உறுப்புரையின் பிரகாரம் சனாதிபதி பதவியானது வறிதாயிருக்கும் பட்சத்தில் இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.
அவ்வாறு வறிதாகின்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் சனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் நடத்தும் அதிகாரியாகச் செயல்படுகிறார், மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டால், தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். இறுதியாக, சனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளரின் பெயர் மூன்று நாட்களுக்குள் வர்த்தமானியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்படும்.
இது தொடர்பான விரிவான பதிப்பிற்கு, சனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினை பார்வையிடவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






