இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தேர்தல் சட்டத் திருத்தங்கள் உள்ளடங்கிய 03 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில்

திகதி : 2022-07-06

இலங்கை தேர்தல் முறைமை தொடர்பான சட்டங்களை திருத்துவதற்கான முன்மொழிவு உள்ளடங்கிய 03 தனியார் உறுப்பினர் சட்டமூலங்களை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் தனியார் உறுப்பினர் பிரேரணையாக இன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதற்கமைய, 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தை நிறுத்துவதற்கான சட்டமூலம் மற்றும் 1946 ஆம் ஆண்டு 53 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பன இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டன.

அதற்கமைய, இந்த நிறுவங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு 35 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழக்க வேண்டியதன் அவசியத்தை இந்தத் திருத்தங்கள் மூலம்  முன்வைக்கப்பட்டுள்ளது.  

அதற்கமைய, பாராளுமன்றத் தேர்தலில் நியமனப்பத்திரத்தைச் சமர்ப்பிக்கும்போது தேர்தல் மாவட்டத்துக்கு பெயர்குறித்து நியமிக்கப்படும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியினருக்குக் குறையாமல் இளைஞர் வேட்பாளர்களாக இருப்பதை ஒவ்வோர் அரசியற் கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் உறுதிப்படுத்தல் வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

அதேபோன்று, மாகாண சபைத் தேர்தலில் நியமனப்பத்திரத்தைச் சமர்ப்பிக்கும்போது நிர்வாக மாவட்டத்துக்கு பெயர்குறித்து நியமிக்கப்படும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியினருக்குக் குறையாமல் இளைஞர் வேட்பாளர்களாக இருப்பதை ஒவ்வோர் அரசியற் கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் உறுதிப்படுத்தல் வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அதிகார சபைத்தேர்தலில் நியமனப்பத்திரத்தைச் சமர்ப்பிக்கும்போது உள்ளூராட்சி அதிகாரசபைக்கு பெயர்குறித்து நியமிக்கப்படும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியினருக்குக் குறையாமல் இளைஞர் வேட்பாளர்களாக இருப்பதை ஒவ்வோர் அரசியற் கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் உறுதிப்படுத்தல் வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

 

pvt-bill

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom