சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விரைவில் குணமடைய சீன சபாநாயகர் வாழ்த்து |
திகதி : | 2022-01-31 |
கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் விரைவில் குணமடைவதற்கு வாழ்த்துத் தெரிவித்து சீனமக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்றத்தின் சபாநாயகர்) லீ சன்ஷூ கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
கொவிட்-19 சவாலின் ஆரம்பத்திலிருந்து இலங்கையும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உதவிகளைப் புரிந்திருப்பதுடன், இதன் மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான பாரம்பரிய உறவு பலமைடைந்துள்ளது. தொற்றுநோய்க்கு எதிராகப் போராட சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என்றும் சீன சபாநாயகர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளின் சட்டவாக்க சபைகளுக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதன் ஊடாக இலங்கையுடனான உறவுகளை மேலும் மேம்படுத்த சீனா உத்தேசித்துள்ளதாக சீன சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






