தென் கொரிய சபாநாயகர் நாளை (21) பாராளுமன்றம் வருகை |
திகதி : | 2022-01-20 |
நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று (19) இலங்கைக்கு வருகைதந்துள்ள தென்கொரியாவின் பாராளுமன்ற தேசிய சபையின் கௌரவ சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) நாளை (21) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென் கொரிய சபாநாயகர் நாளை (21) மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளதுடன், இதன்போது கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் படைக்கலச் சேவிதர் நரேந்திர பர்னாந்து ஆகியோர் தென் கொரிய சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்கவுள்ளனர்.
அதனையடுத்து, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தென் கொரிய கௌரவ சபாநாயகர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெறும். அதன்பின்னர், தென் கொரிய கௌரவ சபாநாயகர் விசேட விருந்தினர் கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வைப் பார்வையிடவுள்ளார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






