சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு சீன சபாநாயகரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி |
திகதி : | 2022-01-05 |
இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் அவர்கள் இன்று (05) முற்பகல் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களைச் சந்தித்ததுடன், சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை கௌரவ சபாநாயகரிடம் கையளித்தார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை இவ்வருடத்தில் பலப்படுத்துவதற்கு உறுதியுடன் இருப்பதாக சீனத் தூதுவர் இங்கு சுட்டிக்காட்டினார். வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்தமைக்காக சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ அவர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்கள் நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு சபாநாயகர் இங்கு நன்றி பாராட்டினார்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










