இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தைச் சந்தித்தார்

திகதி : 2021-12-30

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் அரிஃபுல் இஸ்லாம் அவர்கள் மரியாதையின் நிமித்தம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக அவர்களை அண்மையில் (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் இலங்கை பாராளுமன்றத்துக்கும், பங்களாதேஷ் பாராளுமன்றத்துக்கும் இடையிலான நட்புறவு குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இரு சட்டவாக்க சபைகளுக்கும் இடையிலான பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை விரைவில் புதுப்பிப்பது தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையினால் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வினைத்திறனான முறையில் இருப்பதை தாரிக் மொஹமட் அரிஃபுல் இஸ்லாம் பாராட்டியிருந்தார்.

பங்களதேஷ் உயர்ஸ்தானிகருக்கும், பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

 

1 2

4 5

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom