இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

திகதி : 2021-12-10

2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 157  வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 64  வாக்குகளும் அளிக்கப்பட்டன. இன்று மாலை 06.05 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. நவம்பர் 13 சனிக்கிழமை முதல் நவம்பர் 22ஆம் திகதி வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

நவம்பர் 22ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நவம்பர் 23ஆம் திகதி குழுநிலை விவாதம் ஆரம்பமானதுடன், சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக இன்று வரை (டிசம்பர் 10) 16 நாட்கள் குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom