வாத்துவகே மஞ்சு லலித் வர்ணகுமார அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிச்சத்தியம் செய்துகொண்டார் |
திகதி : | 2021-12-01 |
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ வாத்துவகே மஞ்சு லலித் வர்ணகுமார அவர்கள் இன்று (01) பிரதி சபாநாயகர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்டார்.
பிரதி சபாநாயகர் முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்ட பின்னர் அவர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே வாத்துவகே மஞ்சு லலித் வர்ணகுமார இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புளத்சிங்கள தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராகச் செயற்பட்ட அவர் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 46,361 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









