"இலங்கையில் சிவிலியன் பிரேவரி 1993 – 2018" புத்தகம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களிடம் கையளிப்பு |
திகதி : | 2021-11-08 |
கசுன் பி. சந்திரரத்ன எழுதிய "இலங்கையில் சிவிலியன் பிரேவரி 1993 – 2018" (Civilian Bravery in Sri Lanka 1993 – 2018) புத்தகம், கடந்த 06 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள், கடந்த 25 வருடங்களாக குடிமக்களின் வீரச்செயல்கள் தொடர்பான கருத்தையும் அதன் செயற்பாட்டையும் முன்னெடுப்பதற்காக குடிமக்களின் வீரச்செயல்களுக்கான மன்றத்தை அமைத்துள்ள கசுன் பி. சந்திரரத்னவின் அர்ப்பணிப்பை பாராட்டினார். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அடிப்பாதையை பின்பற்றி தானும் இவ்வமைப்பின் பிரதம போசகராக நியமிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸூம் தொழிநுட்பத்தினூடாக இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










