இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கோபா குழுவின் மூன்று அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 09ம் திகதி

திகதி : 2021-11-07

கடந்த ஜுலை 20ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் 06ஆம், 07ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) மூன்று அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 09ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 10ஆம் திகதி குருநாகல் மாநகரசபையும், 16ஆம் திகதி குடிவரவு, குடியகல்வுத் திணைக்களமும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ விநியோக நடவடிக்கைகள் குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கோபா குழு முன்னிலையில் கலந்துரையாடப்படவிருப்பதுடன், எதிர்வரும் 19ஆம் திகதி சுற்றாடல் அமைச்சு குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 24ஆம் திகதி கல்லோயா பெருந்தோட்ட நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

இதுதவிரவும், தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழு எதிர்வரும் 09ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், இதில் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம், வேலையாட்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது தொடர்பான சட்டமூலம் என்பன ஆராயப்படவுள்ளன. அத்துடன், காணி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு அன்றையதினமே பிற்பகல் 2.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு எதிர்வரும் 10ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்குக் கூடவுள்ளது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய தேவையான அதிகாரிகள் ஒன்லைன் முறையின் ஊடாக இணைத்துக்கொண்டு இக்கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom