இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

திகதி : 2021-11-01

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை பாராளுமன்றத்தில் இன்று (01) சந்தித்தார்.  

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தார்.

கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் சபாநாயகர் தனது நன்றியை தெரிவித்ததுடன், இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

1 2

3 4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom