இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2020ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது

திகதி : 2021-10-29

2020ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரட்ன அவர்கள் நேற்று (28) கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்தார்.

இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

அரசியலமைப்பின் 148வது சரத்தின் கீழ் நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்குக் காணப்படுகிறது. இந்த செயற்பாடை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பின் 154வது சரத்தின் கீழ் கணக்காய்வாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளுக்கு அமைய 2020ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை இவ்வாறு கையளிக்கப்பட்டது.

இதற்கமை அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள், அதிகாரசபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள், வெளிநாட்டு உதவித் திட்டங்கள் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் கணக்காய்வுகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

 

1 2

3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom