இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு |
திகதி : | 2021-10-22 |
இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவுசெய்யப்பட்டார். நேற்றையதினம் நடைபெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – கனடா பாராளுமன்ற சங்கத்தின் மறுசீரமைப்புக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்.
இக்கூட்டம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினோன் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், டயானா கமகே மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் பிரதித் தலைவர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்ஹ உதவிச் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
பொதுநலவாயத்தில் பகிரப்பட்ட பங்கெடுப்பு, கொழும்புத் திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி உதவிகள் மற்றும் இதற்கு மேலதிகமாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய சமூகம் போன்றவற்றின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நட்புறவு
காணப்படுவதாக இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் வர்த்தகத் துறைகள் குறித்து கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் பத்து நாடுகளில் கனடா காணப்படும் நிலையில், இலங்கையில் தற்பொழுது காணப்படும் புதிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மேலும் முதலீடுகளை மேற்கொள்ளவும், வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கும் கனேடியப் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். கொவிட் -19 தாக்கம் குறைவடைந்ததும் கனடாவிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் குழப்பம் மற்றும் முரண்பாடுகள் காணப்பட்டமை மற்றும் வலுவான கல்வி இணைப்புக்கள் காரணமாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கனேடியர்களின் சனத்தொகையினால் கனடா நன்மையடைந்துள்ளது என இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினோன் தெரிவித்தார். கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஜனநாயகம் வரலாற்றின் மையமாக இருப்பதுடன், பன்முகப்படுத்தப்பட்ட ஜனநாயகம் பல்வேறுபட்ட சமூகங்களை உள்ளடக்குவதற்கு சிறந்த வழியென்றும், ஜனநாயகத்தை விஸ்தரிப்பதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கு பாராளுமன்றத்தினாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் சிறந்த பங்களிப்பைச் செலுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவசெய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தனது நன்றியுரையில், பல்லினங்களைக் கொண்ட இரு முன்னாள் காலனித்துவ நாடுகளும் சிறந்ததொரு நாளைக்காக ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









