கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆசிய பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தின் மூன்று நாள் மெய்நிகர் அமர்வில் பங்கேற்பு |
திகதி : | 2021-10-03 |
பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டதின் இறுதி அமர்வில் பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க (CPA) ஆசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக இலங்கை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கடந்த 30 ஆம் திகதி பங்கேற்றார். இதன்போது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸாநாயக்க அவர்களும் உடனிருந்தார்.
மெய்நிகர் முறையில் மூன்று நாட்கள் தொடர்ந்து இடம்பெற்ற பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி ஆரம்பமானது. செயற்குழுவில் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் பொதுநலவாயத்தின் 9 பிராந்தியங்களான ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, பிரித்தானிய தீவுகள் மற்றும் மத்திய தரைக்கடல், கனடா, கரீபியன், அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக், இந்தியா, பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பிராந்தியங்களின் பிரதிநிதிகள் அடங்குவர்.
அதற்கமைய, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கடந்த 29 ஆம் திகதி திட்டமிடல் மற்றும் மீளாய்வுத் துணைக்குழுவின் கூட்டத்தில் மெய்நிகர் முறையின் ஊடாகப் பங்கேற்றார். இங்கு துணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட முந்தைய தீர்மானங்களை பொதுநலவாய தலைமைச் செயலகம் செயல்படுத்துவது தொடர்பான விடயங்களை குழு உறுப்பினர்கள் ஆராய்ந்தனர்.
நல்லாட்சியை ஊக்குவிப்பதற்கும் சிறந்த நடைமுறைகளை அடையாளம் காண்பதற்குமான பொதுநலவாய நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் நோக்கத்தில் ‘ஆண்டுக்கான பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்குவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பொதுநலவாய பாராளுமன்றச் சங்க முன்னாள் உறுப்பினர்களின் அமைப்பை (CPA Alumni) ஸ்தாபிக்கும் விரிவான திட்ட முன்மொழிவு துணைக்குழுவின் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டது. பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் பொதுச் செயலாளரின் விளக்கத்தைத் தொடர்ந்து, அனுபவம்மிக்க வழிகாட்டிகளின் வழிகாட்டுதல்களால் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவுவதன் பெறுமதியை எடுத்துக்காட்டி பொதுநலவாய முன்னாள் உறுப்பினர்களின் அமைப்பை (CPA Alumni) ஸ்தாபிப்பதற்கான அனுமதியை துணைக்குழு வழங்கியது.
இந்தக் கலந்துரையாடல்களை அடுத்து மூன்று நாட்கள் மெய்நிகராக இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் (CPA) செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்தது. அதற்கமைய செயற்குழுவின் 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய ஆண்டுக்கான கூட்டம் இந்திய அசாம் கிளையினால் நடத்தப்படும். மேலும் 65வது பொதுநலவாய பாராளுமன்ற மாநாடு (CPC) கனடா ஹலிபாக்ஸில் 2022 ஆகஸ்ட் 20 முதல் 26 வரை இடம்பெறவுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









