இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தினார்

திகதி : 2021-09-23

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

வர்த்தக அமைச்சரினால் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 06ஆம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 2021 ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய 2003ஆம் ஆண்டு 09ஆம் இலக்கப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டம் நேற்று முதல் (22) நடைமுறைக்கு வருகிறது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom