நிதிச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது |
திகதி : | 2021-09-07 |
பாராளுமன்றத்தில் இன்று (07) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதிச் சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
நிதிச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பின்போது எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வாக்கெடுப்புக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதேநேரம், இன்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்கள் இன்றியும், வாக்கெடுப்பு இன்றியும் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், அத்திவாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல்கள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி (கட்டளைச்) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்கு விதிகள் என்பனவும் இன்று பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






