இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது

திகதி : 2020-03-03

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 33 ஆம் உறுப்புரையின் பநதி (2) இன் உப பந்தி (இ) உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 70 ஆம் உறுப்புரையினால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டும், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகளைப் பின்பற்றியும், 2020 மார்ச் 02 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றத்தைக் கலைத்து, 2020 மே மாதம் 14 ஆம் திகதியன்று பாராளுமன்றமொன்றைக் கூடுமாறு அழைக்கிறார்.

 

இதற்கு மேலதிகமாக, 2020.04.25 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்துவதற்கும், 2020.03.12 ஆம் திகதி முதல் 2020.03.19 ஆம் திகதி வரையான காலப் பகுதி பெயர்குறித்த நியமனக் காலப்பகுதியாகவும் குறித்துரைக்கப்படுகிறது.

 

[ 2020 மே 02ஆம் திகதிய 2165/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி ]

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom